கோவை தடாகம் பகுதியில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசார் கைது

கோவை தடாகம் பகுதியில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் மாணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


கோவை: கோவை தடாகம் பகுதியில் கல்லூரி மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சாவை தடாகம் போலிசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கல்லூரி மாணவர் ராகுல்(20) என்பவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



கோவை தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியநாயக்கன் பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் மேற்பார்வையிலான தனிப்படையினர் தடாகம் உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் காவலர்கள் வீரமணி, பாலசுப்பிரமணி அடங்கிய குழுவினர் தடாகம் கணுவாய் பகுதியிலுள்ள கோழிப்பண்ணை சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த கல்லூரி மாணவரின் பையை சோதனை செய்தபோது அதில் 2.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் பெயர் ராகுல் என்பதும் அவர் கோவை மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.



இதையடுத்து அவரிடம் இருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்த தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

கோவை மாநகர மேம்பாலங்களில் இரவு நேரத் தடை நீக்கம்

கோவை மாநகரின் காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை மற்றும் திருச்சி சாலை மேம்பாலங்களில் மார்ச் 18 முதல் அமல்படுத்தப்பட்ட இ...

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...