உடுமலையில் நகர பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்: மாவட்ட தலைவர் மங்களம் ரவி பங்கேற்பு

உடுமலையில் நகர பாஜக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி கலந்து கொண்டார். கடந்த தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் உடுமலை நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பாஜக பூத் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி பேசுகையில், "பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சுமார் 2 லட்சம் வாக்குகள் மேல் பெற்றுள்ளது. குறிப்பாக உடுமலை நகராட்சியில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக 6,494 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து அபார சாதனை புரிந்துள்ளது. இதற்கு நகர நிர்வாகிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்றார்.

மேலும் அவர், "வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் சிறப்பாக பணியாற்றி நகராட்சி தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு பதவிகளை பிடிக்க வேண்டும். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக அண்ணாமலை வெற்றி பெற அனைவரும் இப்போதிலிருந்தே பாடுபட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.



இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், வர்த்தக அணி மாநில செயலாளர் கார்த்திகேயன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட பிரச்சார அணி தலைவர் சின்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ராதிகா, நகர பொதுச் செயலாளர்கள் ஐயப்பன், சீனிவாசன், தங்கதுரை, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேஷ் ஆனந்த் செல்வி, கண்ணப்பன், நாச்சியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...