பங்கு சந்தை முதலீட்டில் ரூ.34 லட்சம் மோசடி: இரண்டு பேர் கைது

கோவையில் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி ரூ.34 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.


Coimbatore: கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் என்பவர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதில், ஆன்லைனில் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்ற தகவல் அவருக்கு வந்ததாகவும், இதனை நம்பி அவர் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

லாபத்துடன் முதலீடு செய்வது தொடர்பான வீடியோவை வாட்ஸ்அப்பில் அனுப்பியதாகவும், பணம் அனுப்பினால் பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டித் தருவதாகக் கூறியதாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனை நம்பி அருண் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.34 லட்சம் அனுப்பியுள்ளார்.

லாபத் தொகை குறித்துக் கேட்டபோது பணம் முதிர்வு அடைவதாகத் தெரிவித்ததாகவும், பின்னர் லாபத் தொகையையும் முதலீட்டுத் தொகையையும் திரும்பக் கேட்டபோது தராமல் மோசடி செய்துவிட்டதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செல்போன் எண்கள் மற்றும் பல்வேறு ஆன்லைன் தகவல்களின் அடிப்படையில் துடியலூரைச் சேர்ந்த தனசேகரன் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரவி சந்துரு ஆகிய இருவரை ஜூலை 1 அன்று கைது செய்தனர்.

கைதான இருவரிடமிருந்து பல்வேறு வங்கிகளின் நூற்றுக்கணக்கான காசோலைப் புத்தகங்கள், கிரெடிட் கார்டுகள், ஏ.டி.எம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 152 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து...