பீளமேடு பகுதி -1 சார்பாக அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று இனிப்பு வழங்கும் நிகழ்வு

கோவை பீளமேடு பகுதி -1 சார்பாக, அருந்ததியர் சமூகத்திற்கான 3 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை வரவேற்று நேரு நகரில் இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை பீளமேடு பகுதியில், அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை வரவேற்கும் விதமாக இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த அருந்ததியர் சமூகத்திற்கான 3% உள் இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக பீளமேடு பகுதி -1 சார்பாக, 26 வது வட்டத்தில் நேரு நகர் பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பீளமேடு பகுதி -1 செயலாளர் துரை. செந்தமிழ் செல்வன் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 26 வது வட்ட கழக செயலாளர் ஆ.மாடசாமி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.



இந்நிகழ்வில் பகுதி துணை செயலாளர் லக்ஷ்மி, மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், வெ. துரைசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் க. மணிகண்டன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் கே. சி. ரமேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், வட்ட கழக நிர்வாகிகள் குருசாமி, அனுசியா, தாமஸ் துறை, தகடூர் செல்வம், வேலுசாமி, பூபதி, வெங்கடேஷ், கார்த்திக், ரஞ்சித், சுந்தரராஜ், அனந்தி, காஸ்டிங் நடராஜ் உள்ளிட்ட கழக தோழர்கள் மற்றும் முன்னோடிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...