மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: சிபிஐ கட்சியினர் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு இல்லாததை கண்டித்து சிபிஐ கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையில் தமிழக அரசுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து தமிழகம் முழுவதும் சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையம் அருகே சிபிஐ கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.



பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போராட்டக்காரர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின் காரணமாக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...