கோவை வேளாண் பல்கலையில் காய்கறி, பழப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி ஜூலை 23, 24 தேதிகளில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் ரூ.1,770 கட்டணம் செலுத்த வேண்டும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "வணிகமுறையிலான காய்கறி மற்றும் பழப்பொருட்கள் தயாரித்தல்" குறித்த இரு நாள் பயிற்சி வரும் ஜூலை 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இதில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார் நிலைபானம், ஊறுகாய், ஊறுகனி, பழப்பார் போன்ற உணவு பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படும்.


பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் ரூ.1,770 (ரூ.1,500 + 18% GST) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சி, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடைபெறும்.


மேலும் விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் என்ற முகவரியில் அல்லது 94885-18268 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Newsletter

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...