கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி, ஆட்சியர் ஆய்வு

கோவை கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க எம்.பி கணபதி ராஜ்குமார், ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். சாலை விரிவாக்கம் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


Coimbatore: கோவை மாநகர் கணபதி பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என நெடுநாட்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், ஜூலை 16 அன்று மதியம் அப்பகுதியில் கோவை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கணபதி ராஜ்குமார், கோவை ஆட்சியர் Kranthi Kumar Pati, கோவை மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran மற்றும் அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆட்சியர் Kranthi Kumar Pati, "சத்தி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோவை மாநகராட்சி சார்பில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக என்ன செய்ய முடியும், கால அவகாசம் எடுத்து என்ன செய்ய முடியும் என்பதை பற்றிய ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்," என்றார்.



ஆட்சியர் மேலும் கூறுகையில், "இங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் சாலை விரிவாக்கம் செய்வதற்கான இடம் கிடைக்கும் என்ற கருத்து ஆய்வின் பின் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த பணிகள் விரைவில் துவங்கும்," என்றார்.

சக்தி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கணபதி வேலன் தியேட்டர் முதல் சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்ற 2020 அக்டோபர் மாத கோவை மாநகராட்சி தீர்மானத்தின்படி நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிகிறது. இங்கு 3 மீட்டர் அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



"மேலும் 73,000 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிலத்தை கையகப்படுத்தும் பணி 1-2 மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...