வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஜூலை 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.


Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நாளை (ஜூலை 16) அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று (ஜூலை 15) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வால்பாறை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறை அறிவிப்பு வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார். பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...