உடுமலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: அமைச்சர் சாமிநாதன் தொடக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்விஜி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அமைச்சர் மு.பே. சாமிநாதன் தொடங்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சிக்கோட்டை ஊராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் ஆர்விஜி தொடக்கப்பள்ளியில் தமிழக முதலமைச்சரின் கிராமப்புறங்களில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை தமிழக செய்தித் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பே. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, அமைச்சர் சாமிநாதன் பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் சந்தகை இனிப்பு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த முக்கிய திட்டம் கிராமப்புற மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த நிகழ்வில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், வட்டாட்சியர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாநிலம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் கிராமப்புற மாணவர்களின் பள்ளி வருகை மற்றும் கல்வித் தரம் மேம்படும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...