கோவை வ.உ.சி பூங்கா அருகே உணவு வீதி திட்டப் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கோவை வ.உ.சி பூங்கா அருகே ரூ.1 கோடி மதிப்பில் உணவு வீதி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் தாமதமடைந்துள்ளதால், அவற்றை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Coimbatore: கோவை வ.உ.சி பூங்கா அருகே உணவு வீதி திட்டம் மூலம் தரமான, சுவையான உணவுகளை ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காத வகையில் ஒரு சுத்தமான சாலையோர பகுதியில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு ரூ.1 கோடி நிதியை ஒதுக்கி பணிகளை நடத்த அறிவுறுத்தியது.

தமிழகத்தில் முதல் கட்டமாக கோவையுடன், சென்னையில் உள்ள எலியட் பீச் பகுதி, வேளாங்கண்ணி சாலையோர உணவு தெரு பகுதி, மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள கோவில் வீதி ஆகிய இடங்களிலும் தலா ரூ.1 கோடியில் இந்த உணவு வீதி திட்டத்தை முன்னெடுக்க மொத்தம் ரூ. 4 கோடியை மத்திய அரசு சென்ற ஆண்டு ஒதுக்கியது.

இந்த வீதிகளில் ஒரே மாதிரியான கடைகள் கட்டப்படும். அத்துடன் நடைபாதை, தெரு விளக்கு, வாடிக்கையாளர்கள் கடை அருகே உட்கார்ந்து உணவு சாப்பிட இடம், கழிப்பிட வசதி, திடக்கழிவு சேகரிப்பு தொட்டி என நிறைய வசதிகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

கோவையில் இந்த பணியை மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது. இதற்கான கட்டுமான பணிகள் அக்டோபர் 2023 துவங்கியது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட கடைகள் தலா 330 சதுர அடியில் வ.உ.சி பூங்கா எதிரே, மைதானத்துக்கு அருகே ஒரு நேர் பகுதியில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கடைகள் ஏலம் அடிப்படையில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும். இதற்கு முன்பு இந்த பகுதியில் கடைகள் நடத்தியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கடைகள் கட்டி முடிக்கப்பட்டு, மேற்கூரைகள் அமைக்கப்பட்டு, வண்ணமும் பூசி முடிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் மாதத்திலேயே சுமார் 80% பணிகள் நிறைவடைந்து விட்டது. மீதம் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, தெரு விளக்கு வசதி, கழிப்பிட வசதி போன்றவை அமைக்கப்பட வேண்டி உள்ளது.

மார்ச் மாதத்தில் முடியும் என எதிர்பார்த்த இந்த திட்டப்பணிகள், மே, ஜூன் என சென்று கொண்டே இருந்தது. இப்போது ஜூலை ஆகியும் இந்த உணவு வீதி பணிகள் முடியாமல் உள்ளது.

கட்டிடங்கள் கட்டப்பட்டாலும் பிற பணிகள் மீதம் இருப்பதால் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியில் குப்பைகள் சேர ஆரம்பித்துள்ளது. இலைகள் மற்றும் பிற குப்பைகள் கொத்து கொத்தாக அங்கு பரவி உள்ளது.

இங்கு மாநகராட்சி கவனம் செலுத்தி, துப்புரவு பணிகளை மேற்கொள்வதோடு விரைவில் மீதம் உள்ள பணிகளை முடித்து உணவு வீதி மூலம் சுத்தமான உணவை எளிய மக்களும் தரமான வகையில் அனுபவிக்க வழி செய்ய வேண்டும் என மக்கள் தற்போது கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...