தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 9, 10 தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெறுகிறது. பல்வேறு உணவு பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்படும்.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ஜூலை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது. இந்த பயிற்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடத்தப்படுகிறது.

பயிற்சியில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி, பிஸ்கட், அடை மிக்ஸ், ஊறுகாய், நூடுல்ஸ், சூப் மிக்ஸ் போன்ற முருங்கை சார்ந்த பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்படும். அதேபோல், காளான் பொடி, சூப் மிக்ஸ், பிஸ்கட், ஊறுகாய், பிரியாணி மிக்ஸ், பிழிதல் தொழில்நுட்பம் போன்ற காளான் சார்ந்த பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும். மேலும், தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்தும் விளக்கப்படும்.

இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் ரூ.1,770/- (ரூ.1500 + GST 18%) கட்டணத்தை பயிற்சியின் முதல் நாளன்று செலுத்த வேண்டும். பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வர, வாயில் எண்.7, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மருதமலை சாலை வழியாக வரலாம்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் அவர்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் 94885 18268, மின்னஞ்சல் [email protected] ஆகியவற்றின் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...