சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

கோவை சரவணம்பட்டியில் போக்கியத்துக்கு வீடு தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Coimbatore: கோவை சரவணம்பட்டி தச்சன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் (56) மற்றும் அவரது மனைவி குணசுந்தரி (54) ஆகியோர் போக்கியத்துக்கு வீடு தேடி வந்தனர். அப்போது, கோவை தெற்கு அருணாசலம் காலனியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் சரவணம்பட்டி மஹா நகரில் உள்ள வீட்டை போக்கியத்துக்கு விடுவதாக தெரிவித்தார்.

இதையடுத்து, குணசுந்தரி ஏப்ரல் 24-ஆம் தேதி ராஜசேகரிடம் ரூ.10 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ராஜசேகர் வீட்டை ஒப்படைக்கவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக குணசுந்தரி ஜூலை 4-ஆம் தேதி சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...