கனமழை காரணமாக நொய்யல் பேரூர் படித்துறையில் நீர்வரத்து அதிகரிப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

மழையால் பேரூர் படித்துறையில் எட்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கியடி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. ஆற்றில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கோவை: மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிந்து வருகின்றது.



இதனால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலையில், கோவை நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நீராக மழை நீர் ஆற்றில் ஓடுகின்றது. இதனால் தண்ணீர் வராத பல்வேறு இடங்களிலும் தண்ணீர் வர ஆரம்பித்து இருக்கிறது.

நொய்யல் ஆற்றின் மிக முக்கியமான பகுதியான பேரூர் படித்துறையில் கடந்த எட்டு மாதங்களாக பெரிய அளவிலான நீர் வரத்து இல்லை. நொய்யல் ஆறு வறண்டது. இதனால் தர்ப்பணம் தருவோர் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருந்தனர். பேரூர் ஆற்றில் வெள்ளம் இல்லாததால் அருகாமையில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதுமான பாசனமும், கால்நடைகளுக்கு தண்ணீரும் இல்லாமல் இருந்தன.



இந்த நிலையிலே கடந்த ஒரு வார காலமாக பொழிந்து வரும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு, நொய்யல் பேரூர் படித்துறையிலும் ஓடுகிறது. ஐந்து படிக்கட்டுகள் மூழ்கி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது. பொதுமக்கள் இதில் பிளாஸ்டிக் பொருட்களை, குப்பைகளை, துணிகளை வீசக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

வெள்ளம் வேகமாக செல்லும் பகுதிகளில் இறங்கவோ, குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என அதிகாரிகள் வலியுறுத்தினர். தர்ப்பணம் தருவோருக்கு தண்ணீர் அவசியம் என்ற நிலையில், ஆடி அமாவாசைக்கு தற்பொழுது வரும் வெள்ளம் போதுமானதாக இருக்கும் என புரோகிதர்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர். வறட்சி நீங்கும் விதமாக தொடர்ந்து மழை பொழியும் நிலையில், அதனை ரசிப்பதாகவும், நீர் நிலைகளில் போதுமானதாக பாதுகாப்புடன் இருக்க வேண்டுமெனவும், அப்பகுதியில் அதிகாரிகள் அறிவுறுத்தியதனை அப்பகுதி மக்கள் நினைவுகூர்ந்தனர்.

Newsletter

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...