கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம், ஆனைமலை வட்டாரத்திற்கான வளமிகு வட்டார வளர்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று ஜூன்.27 நடைபெற்றது.



இக்கூட்டத்தில் அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2023-2024 ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 35 பணிகளில் 15 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. நிலுவையாக உள்ள 20 பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அவற்றினை விரைந்து முடிக்கவும் பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய வட்டாரங்களில் நிலுவையாக உள்ள பணிகளை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் முடிக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.



15 முன்மொழிவுகள் பரிசீலனைக்கு ஆனைமலை வட்டாரம், கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதூர் பகுதியில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்ட பெறப்பட்ட முன்மொழிவுகளும், வனத்துறையிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளும் மாவட்ட நிர்வாகத்தால் பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மேலும் மகளிர் குழுவிற்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் புளி பதப்படுத்தி மதிப்புக்கூட்டுதல் செய்யும் பணிக்கான முன்மொழிவு பரிசீலிக்கப்பட்டு பரிந்துரைக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. வளமிகு வட்டாரமாக கோயம்புத்தார் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆனைமலை வட்டாரம் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் எந்தெந்த குறியீடுகளில் பின்தங்கி உள்ளது என கள ஆய்வு மற்றும் துறை வாரியான அறிக்கைகள் மூலம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்யும் விதமாக திட்டங்கள் மூலம் பணிகளை தேர்வு செய்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார்.

மேலும் இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திட அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் மாநில திட்டக்குழுவினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன் பேராசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின்கீழ் அரசுத் திட்டங்களை எளிமையாகவும் விரைவாகவும் மக்களிடம் சேர்க்கும் விதமாக முன்மொழிவுகள் தயார் செய்து வழங்கவும் அதனை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்து அனுமதி பெற்று செயல்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...