கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடக்கம்

வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன், நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பைகிடங்கு வளாகத்தில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் சுமார் 2000 எண்ணிக்கையிலான மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் பசுமையான சூழல் ஏற்படுத்தும் வகையில் குப்பை கிடங்கு எல்லை பகுதியில் சுமார் 9.4 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வேம்பு, பூவரசன், புங்கன் மற்றும் நாவல் உள்ளிட்ட 14 வகையான மரங்கள் என 2000 மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.

மேலும், மரக்கன்றுகள் நடும் பணியினை மாநகராட்சி ஆணையாளர் முன்னிலையில், மேயர், தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்து, நல்ல முறையில் பராமரித்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், தெற்கு மண்டல குழுத்தலைவர் ர.தனலட்சுமி, ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, உதயகுமார், குணசேகரன், அப்துல்காதர், பாபு, வசந்தா, சரளா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...