"வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச நாள் இன்று "ஏப்ரல் 12"


ஆண்டு தோறும் ஏப்ரல் 12ஆம் தேதி, உலகமெங்கிலும் உள்ள வீதியோர சிறுவர்களுக்களின் நல்வாழ்வுக்காகவும், உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் நாளாக கொண்டாடப்படும் சர்வதேச நாளாகும். இதனை இந்தியா, மொராக்கோ, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளின் வீதியோர சிறுவர்களும், யூகே, அயர்லாந்து போன்ற நாடுகளின் பள்ளிச்சிறுவர்களும் கொண்டாடிவருகின்றனர்.

சர்வதேசத்தில் உள்ள வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை - சுமார் 10 கோடிக்கும் அதிகம் என்று மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் 7 லட்சம் முதல் 12 லட்சம் வரையில் இந்த எண்ணிக்கை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சரியான கணக்கெடுப்பு இல்லாததால், இந்த எண்ணிக்கை அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.

பிறந்தக் குடும்பத்தின் மோசமான சூழல், நகரத்துக்கு இடம்பெயர்தல், குழந்தைத் தொழிலாளர் முறை முதலான காரணங்களால் பாதுகாப்பற்றச் சூழலில் வீதியோரச் சிறுவர்கள் வாழ்ந்திட வேண்டிய நிலை நீடிக்கிறது. 

வீதியோரச் சிறுவர்களுக்கு அடிப்படை உரிமை, பாதுகாப்பு, கல்வி முதலானவற்றை உறுதி செய்வதற்காக, சி.எஸ்.சி என்ற வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச அமைப்பால் கடந்த 2011-ல் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகளும், ஊடகங்களும் இந்தத் தினத்தை அங்கீகரித்து விழிப்புணர்வுக்கு வித்திட்டு வருகின்றன. எனினும், இந்தத் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதற்காக, தொடர்ந்து உலக அளவில் பல அமைப்புகளால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

நம் நாட்டில் குழந்தைகளின் நலனுக்காக இயங்கிவரும் ஹெல்ப் லைன் 1098, வீதியோரச் சிறுவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் பகுதியில் பாதிக்கப்பட்ட இத்தகையச் சிறுவர்களைக் கண்டால், 1098-க்கு அழைத்துத் தகவல் சொல்ல மறந்துவிடாதீர்கள்!

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...