இந்து யாத்திரிகர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து கோவை ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் மனு

காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், இந்து யாத்திரிகர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மனு அளித்தனர்.


கோவை: கடந்த 09-06-2024 அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்து யாத்திரிகர்கள் வைஷ்ணவ தேவி ஆலய தரிசனத்தை முடித்து, சிவகோரி என்ற குகை கோவிலுக்கு செல்லும் வழியில், பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள், ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை வழி மறித்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 10 பேர் மரணம் அடைந்தனர். அத்துடன் 33 நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேற்படி, நிகழ்வு நமது நாட்டின் தேர்தல் முடிந்து, பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கும் நாளில் நடந்துள்ளது மிகவும் வருத்தத்திற்கு உடைய நிகழ்வாகும்.

இதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. யாத்திரிகர்களுக்கு எதிரான பயங்கரவாதிகளின் தாக்குதலை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சியரிடம், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, நாடு முழுவதும் மனுக்களை கொடுத்து நமது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று (14-06-2024) வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பசுப் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர் கார்த்திக், தர்ம பிரசார் மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் மனு அளித்தனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...