பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

பொள்ளாச்சி மாட்டுச்சந்தைக்கு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டன. அதனை வாங்குவதற்காக கேரளா உட்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களைக்கட்டி இருந்தது.


கோவை: தென்னிந்தியாவில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள மாட்டு சந்தை உள்ளது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் என 2 நாட்களில் இந்த மாட்டு சந்தை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் மாடுகள் விற்பனையும், வியாழக்கிழமைகளில் ஆடு, மாடு விற்பனையும் சேர்ந்து நடைபெறுகிறது.

இந்த சந்தைக்கு பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம். மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக சந்தை நாட்களில் 2 கோடி ரூபாய் அளவிற்கே வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வருகிற 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி பொள்ளாச்சி மாட்டு சந்தை களைக்கட்டி இருந்தது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாடு மற்றும் எருமைகள் கொண்டு வரப்பட்டிருந்தது. அதனை வாங்குவதற்காக கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் வந்திருந்தனர். இதனால் இன்று ஜூன்.13 காலை முதலே சந்தை களை கட்டி இருந்தது.

இதனால் கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. கேரள வியாபாரிகள் அதிகளவில் மாடு மற்றும் எருமைகளை வாங்கி சென்றனர். மேலும் மாடுகள் வாங்க வந்தவர்களின் கூட்டமும் அதிகரித்து காணப்பட்டது. ஆண்டுதோறும் அதிகளவில் மாடுகள் விற்பனை நடைபெறும் சந்தையாக பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...