சூலூர் அருகே குடிநீர் பைப்பை உடைத்த மர்ம நபர்கள் - காவல் நிலையத்தை நள்ளிரவில் முற்றுகையிட்ட பொதுமக்கள்

அய்யம்பாளையம் கிராத்தில் குடிநீர் பைப்பை உடைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்நிலையத்தை நள்ளிரவில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி அய்யம்பாளையம். இந்த கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு ஊராட்சி சார்பில் பொது பயன்பாட்டுக்காக நிலத்தடி நீர் தோண்டப்பட்டு அதன் மூலம் தண்ணீரானது வழங்கப்பட்டு வருகிறது.

அய்யம்பாளையம் பகுதியில் நிலத்தடி நீர் கொண்டு செல்லும் குடிநீர் பைப்பை சில மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இதனை அடுத்து அப்பகுதியில் தண்ணீர் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த ஊர் பொதுமக்கள் பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.



உடனடியாக அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி திருப்பூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பின்னரே போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...

பருவமழை எதிரொலி: கோவை வடக்கு மண்டல வடிகால் தூர்வாரும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja வடக்கு மண்டல பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வடி...

அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் தொடர் நீர்வரவால் நீர்மட்டம் 57.12 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 202 கன அட...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது....

கோவை தீத்திபாளையத்தில் வீட்டில் 1.10 டன் குட்கா பதுக்கல்; இருவர் மீது வழக்கு; ஒருவர் தலைமறைவு

கோவை பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தீத்திபாளையம் பாலாஜி நகரில் வீட்டின் முதல் மாடியில் சுமார் 1.10 டன் குட்கா பொருட...