கோவை மத்திய சிறையில் கைதியிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை

மத்திய சிறையில் நேற்று போலீசார் நடத்திய ஆய்வில் வால்மேடு பிளாக்கில் உள்ள 3வது அறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதி ரஹீம்(32) என்பவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டனை மற்றும் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு அடிக்கடி போலீசார் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, சிறைக்குள் போதைப்பொருள் பயன்பாடு உள்ளதா? செல்போன் உபயோகப்படுத்துகின்றனரா? என போலீசார் சோதனை செய்தனர்.

இந்நிலையில், சிறைக்குள் நேற்று ஜூன்.6 போலீசார் சோதனை நடத்தினர். அதில், வால்மேடு பிளாக்கில் உள்ள 3வது அறையில் கைதி ஒருவர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவர் தண்டனை கைதியான கோவையை சேர்ந்த ரஹீம்(32) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் இது குறித்து கோவை மத்திய சிறை ஜெயிலர் சரவணகுமார், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ரஹீம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...