கோவையில் அண்ணாமலை தோல்வி - ஆட்டுக்கறி பிரியாணி விருந்து வைத்து பெரியார் திராவிடர் கழகத்தினர் கொண்டாட்டம்

காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற ஆட்டுக்கறி பிரியாணி விருந்தில் பல்வேறு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களும், அமைப்பினரும் கலந்து கொண்டனர்.


கோவை: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விட திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதனை திமுகவினர் பலரும் நேற்று முதல் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பல்வேறு இடங்களில் ஆட்டுக்கறி பிரியாணியை பொதுமக்களுக்கு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.



இந்நிலையில், கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அண்ணாமலையின் தோல்வி மற்றும் பாஜகவின் தோல்வியை கொண்டாடும் விதமாக ஆட்டுக்கறி பிரியாணி விருந்து படைத்து கொண்டாடினர்.



காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் பல்வேறு திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...