கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதைக் கண்டித்து சக்தி சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாநகரில் இந்து மத கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்து கடவுள்களை அவமதிக்கும் செயலாக உள்ளதாகக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் இந்து கட்சியின் சக்தி சேனா அமைப்பினர் இன்று மனு அளித்தனர்.



முன்னதாக மனு அளிக்க வந்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடவுள் வேடமணிந்து பொதுமக்களிடம் பிச்சை எடுப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது. இச்செயல் மாற்றுமதத்தினரின் கிண்டல்களுக்கு ஆளாக நேரிடுவதாக அமைகிறது. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பவர்களில் பாதி பேர் பிற மதத்தை சார்ந்தவர்கள்.

இச்செயலில் ஈடுபடுபவர்கள் தானமாக பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. கடவுள் வேடமணிந்து பிச்சை எடுப்பதை வண்மயாக கண்டிக்கிறோம். இதில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என கூறினர். 

முன்னதாக, மனு அளக்கவந்த சக்தி சேனா அமைப்பினர் கடவுள் வேடமணிந்துவந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததால் ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...