உலக சாதனைக்காக கோவை சிகரம் குழுவினர் நடத்திய வள்ளி கும்மியாட்டம்

கோவையில் ஆண்கள்,பெண்கள் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பாரம்பரிய இசைக்கேற்றவாறு வள்ளிக்கும்மியாட்டம் ஆடி அசத்தினர். இதனை நோபல் உலக சாதனை புத்தகம் குழுவினர் பார்வையிட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்..



Coimbatore: கோவையில் ஆண்கள்,பெண்கள் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு,பாரம்பரிய இசைக்கேற்றவாறு வள்ளிக்கும்மியாட்டம் ஆடி அசத்தினர். இதனை நோபல்உலக சாதனை புத்தகம் குழுவினர் பார்வையிட்டு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்..



இளம் தலைமுறையினருக்குபழமையான கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,பழமையான கலைகளை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை சிகரம் கலை குழுவின் முப்பெரும் வள்ளி கும்மியாட்ட அரங்கேற்ற விழா சுப்ரமணியம்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.எம்.ஆர்.மண்டப வளாகத்தில் நடைபெற்றது.



ஒயிலாட்டம்,வள்ளிக்கும்மி,ஜமாப் இசை என ஒரு சேர நடைபெற்ற இதில், நாட்டுப்புற பாடல்கள்களை பாட்டுக்கு ஏற்ப,ஆண்கள், பெண்கள்,சிறுவர்,சிறுமிகள் எனஅனைவரும் காலில் சலங்கை கட்டிவள்ளி கும்மி ஆட்டத்தைஆடி அசத்தினர்.இதில்6 வயது முதல் 60 வரையிலான ஆண்கள், பெண்கள் என முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



கலைக்குழுவின் ஆசிரியர் அருண் ஆறுச்சாமி தலைமையில்நான்கரை மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது..தொடர்ந்து நோபல் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாசிரியர் தியாகு நாகராஜ்,மற்றும் கலை பண்பாட்டு மைய பிரிவின் தீர்ப்பாளர் ஹேமலதா ஆகியோர் சிகரம் கலை குழுவினருக்கு நோபல்உலக சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்..

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...