பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் - கோவையில் அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒரிசா மக்களின் வாக்கிற்காகவும், வடநாட்டு மக்களின் வாக்கு வங்கிக்காகவும் தமிழர்களை திருடர்கள் என்று பிரதமர் மோடி இழிவு படுத்தி இருப்பதாக தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: ஒரிசாவில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற பிரச்சாரத்தில் மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, பூரி ஜெகன்நாதர் கோவிலில் உள்ள பொக்கிஷ அறைகள் பூட்டப்பட்ட சாவி காணவில்லை. அதனை கொண்டு சென்று விட்டார்கள் என்பது போன்று பேசியிருந்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலகம் முன்பு அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மே.23 நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், சிபிஐ உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டு மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துமுழக்கங்களை எழுப்பினர்.



தொடர்ந்து பேட்டியளித்த தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மோடி தமிழர்களை திருடர்கள் என்பது போல பேசி இருப்பதாக கூறினார். ஒரிசா மாநில முதல்வருக்கு ஆலோசகராக இருக்கக்கூடியவர் பாண்டியன் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மோடியால் எதிர்கொள்ள முடியாமல், ஒவ்வொரு நாளும் மதம்,சாதி, மொழி பிரிவினை என்று அனைத்து வகையிலும் பேசி மக்களை கூறு போடுவதாக தெரிவித்தார். வாக்கு ஆதாயத்திற்காக I.N.D.I.A கூட்டணியின் மீது பழி சுமத்தி பொய்யான தகவலை பரப்பி வருவதாகவும் விமர்சித்தார்.



உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒரிசாவை மண்ணின் மைந்தர்கள் தான் ஆள வேண்டும் தமிழன் ஆளக்கூடாது என்பது போல பேசி இருப்பதாக தெரிவித்த இராமகிருட்டிணன், மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் தமிழில் திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்றெல்லாம் கூறி காசி தமிழ் சங்கமம் என்று ரயிலை எல்லாம் விட்டு விட்டு மக்களை ஏமாற்றி தற்பொழுது ஒரிசா மக்களின் வாக்கிற்காகவும், வடநாட்டு மக்களின் வாக்கு வங்கிக்காகவும் தமிழர்களை திருடர்கள் என்று இழிவு படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.



மேலும் தமிழக முதலமைச்சர் பிரிவினை பேசுகிறார் என்று மோடி விமர்சித்ததாக கூறிய அவர், ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கு தகுந்தார் போல் பேசி வரக்கூடிய மோடி நிச்சயமாக தோல்வியை சந்திப்பது உறுதி என்று தெரிந்த பின்னர், ஒவ்வொரு நாளும் மன நோயாளி போல பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அதேபோல் பிரதமர் மோடி பெண்களை சக்தி என்று புகழ்ந்து பேசி விட்டுதற்பொழுது வடமாநிலத்திற்கு சென்று மகளிருக்கு இலவச பேருந்து பயணம் அளித்தது தவறு என்று பேசி இருப்பதாக கூறினார். தமிழர்களை இழிவு படுத்தியதற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...