கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (20.05.2024) கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை காவல்துறையினர் சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பதேவர் மகன் செல்வம், பாண்டியன் மகன் இளையராஜா மற்றும் முருகன் மகன் பிரவீன் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,40,000 மதிப்புள்ள 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், மேற்படி நபர்கள் கஞ்சாவை ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் இங்கு கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களை காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...