கஞ்சா விற்பனை இளைஞர்களிடம் இருந்து பாதுகாக்க கோரி கோவை காவல் ஆணையாளரிடம் வீரலட்சுமி என்ற பெண் மனு

வீட்டின் அருகில் கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தனது வீட்டை நோட்டமிடுகின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வீரலட்சுமி என்ற பெண் குடும்பத்துடன் சென்று காவல் ஆணையாளரிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதி எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் வசித்து வருபவர் வீரலட்சுமி. வீரலட்சுமிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகில் இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட முடியாத சூழல் நிலவுவதாகவும், சில நேரங்களில் அங்கு வருபவர்களிடம் இளைஞர்கள் பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வீரலட்சுமியின் மகன்களை சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்யும் இளைஞர்கள் வழிமறைத்து பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டதாகவும், அப்போது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிகிறது. இது குறித்து கடந்த ஏப்ரல் மாதம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வீரலட்சுமி புகார் அளித்திருந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கஞ்சா விற்பனை செய்யும் அந்த இளைஞர்கள் வீரலட்சுமியையும், அவரது இரண்டு மகன்களையும் மிரட்டியுள்ளனர். அப்போது இரு தரப்பிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வீரலட்சுமி இன்று மே.14 மனு அளித்துள்ளார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...