கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்

சிறப்பு தடுப்பூசி முகாமில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசின் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்தில் தடுப்பூசி, சொட்டு மருந்து, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகள் முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.



இந்த சிறப்பு முகாமானது மே 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் யாத்திரை செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.



இதில் முதல் நாளான இன்று 120 நபர்களுக்கும், இரண்டாம் நாளான நாளை 119 நபர்களுக்கும், மூன்றாம் நாளில் 115 நபர்களுக்கும் மொத்தம் 354 பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.



இதில் 65 வயதுக்கு மேற்பட்ட 49 நபர்களுக்கு மட்டும் Seasonal Influenza Vaccine பிரத்தியோகமாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...