கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி

மத்திய சிறையில் 50 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அனைவருக்கும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 50 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சியை சிறை கைதிகள் பெற்றுக் கொடுத்தனர். அதில் கைதிகள் மணிகண்டன் 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம் 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார் 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.



இவர்கள் அனைவரையும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...