பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அமைக்காவிட்டால் ரூ.50,000 அபராதம் – கோவை ஆட்சியர் அறிவிப்பு

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-ன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: வேலை செய்யும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தடைச் சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகார் குழு அனைத்து அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும்.

அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் தலைவராக பெண் அலுவலா் நியமிக்கப்பட வேண்டும்.இரண்டு நபா்களை உறுப்பினராகவும், இந்தத் துறையில் நன்கு பழக்கமான தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவரை உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்றும் விசாரணைக்கான வழிமுறைகள் குறித்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு அரசுத் துறைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசுப் பயிற்சி நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 10 பேருக்குமேல் பணியாற்றும் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களிலும் உடனடியாக உள்புகார் குழு அமைத்து அதன் விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

உள்புகார் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013-இன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.உள்புகார் குழு அமைத்த நிறுவனங்கள் மாதந்தோறும் பெற்ற புகார்கள் குறித்த அறிக்கையை மாவட்ட சமூகநல அலுவலா் அலுவலகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.மேலும், ஆண்டறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாத இறுதிக்குள் சமூக நல அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியா் கிரந்தி குமார் பாடி நேற்று தெரிவித்துள்ளார்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...