உடுமலையில் குட்கா பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

உடுமலை நகரப் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 14.797 கிலோ கிராம் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரப் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வாஸ்துக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உடுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது உடுமலை நகரப் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கட்டாராம் சவுத்ரி(38), சுரேஷ்குமார்(23), தயாராம் (23), சாந்தாராம்(20), உடுமலை தாலுக்கா உரல் பட்டியைச் சேர்ந்த சுரேஷ்(32) ஆகியோர் கணேஷ், கூலிப், ஹான்ஸ், விமல் உள்ளிட்ட 14.797 கிலோ கிராம் அளவிலான போதை வாஸ்துக்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து போதை வாஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...