மக்கள் விரோதபோக்கில் செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து கோவை அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


தமிழர் நலனில் அக்கறை செலுத்தாமலும், தொடர்ந்து தமிழகம் மற்றும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலை கடைபிடித்து வரும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட கமிட்டியின் சார்பில் அக்கட்சியினர் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாநகர காங்கிரஸ் துணை பொதுச் செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

சாய்பாபா காலனி பகுதியில் மாவட்டத் தலைவர் பி.எம்.ஜி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதே போன்று சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பொதுச் செயலாளர் இ.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

கோவை மாநகர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய உழவுக்கு தேவையான கலப்பை, நெல் உள்ளிட்டவற்றை கையில் வைத்துக் கொண்டு, மத்திய அரசு வர்தா புயல் நிவாரணத் தொகையை குறைத்து வழங்குவது, தில்லியில் கடந்த 24 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளை அழைத்து பேசாமல் இருப்பது, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டு தமிழர்களை வஞ்சிக்கும் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...