கோவையில் சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் +2 தேர்வில் 560 மதிப்பெண்கள் எடுத்து அசத்தல்

தங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும் என 12ஆம் வகுப்பு தேர்வில் 560 மதிப்பெண்கள் பெற்ற சுமை வண்டி இழுக்கும் தொழிலாளியின் மகள் ஸ்ரீ ராஜலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: தெலுங்குப்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பால்பாண்டியன், முருகேஸ்வரி தம்பதியினர். பால்பாண்டியன் சுமை வண்டி இழுக்கும் பணி செய்து வருகிறார்.முருகேஸ்வரி லோடு வண்டி ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீ ராஜலட்சுமி, ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு உயிரியல்கணிதவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார்.



இந்நிலையில் நடைபெற்று முடிந்த பொது தேர்வில் கணிதத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றதோடு 600 க்கு 560 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி ஸ்ரீ ராஜலட்சுமி கூறும் போது தான் படிக்க உதவிய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.



மேலும் மருத்துவராக வேண்டுமென்பது எனதுகனவு எனும் அதற்காக நீட் தேர்வு எழுதி உள்ளதாகவும், அதே சமயம் தங்கள் குடும்ப சூழலை கருதி மருத்துவப் படிப்புக்கு தேவையான உதவி செய்ய யாராவது முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...