கோவை மேயர் வீடு அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - குடிநீர் வாரிய பொறியாளரிடம் வாக்குவாதம்

பணத்தை வாங்கிக்கொண்டு லாரிகளில் வரும் குடிநீரை, முக்கிய நபர்களுக்கு மட்டும் விநியோகிப்பார்கள். அந்த குடிநீருக்கும் கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் குடிநீர் குழாய்கள் வழியாக மட்டும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குடிநீர் வாரிய பொறியாளரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை கணபதி, பூசாரிபாளையம் பகுதியில் 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வரவில்லை என்றும், மாநகராட்சி ஊழியர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் இன்று (மே.3) சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இந்தப் பகுதியில் கோவை மாநகராட்சி மேயர் குடியிருக்கும் வீடு உள்ளது. இதனை அடுத்து உடனடியாக தகவல் அறிந்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் இளங்கோ பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



அப்பொழுது லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் லாரிகளில் வரும் குடிநீர் பணத்தை வாங்கிக் கொண்டு முக்கிய நபர்களுக்கு மட்டும் விநியோகிப்பார்கள்.

மேலும் அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பார்கள். அதனால் குடிநீர் குழாய்கள் வழியாக மட்டும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...