குண்டடம் பகுதிகளில் சின்னவெங்காயம் அறுவடை பணி தீவிரம்

கடந்த 20 நாட்களாக சின்னவெங்காயம் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது என்றும் இனிவரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: குண்டடம் சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர் செய்கின்றனர். அதன்படி சின்ன வெங்காயம் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, குண்டடம் பகுதி பொதுவாகவே வறட்சியான பகுதி என்பதால் குறைத்த அளவு தண்ணீரை கொண்டு நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் பி.ஏ.பி. பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். மேலும் இந்தப் பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது.

ஏக்கருக்கு ரூ.75ஆயிரம் செலவு செய்து கடந்த வருடத்தில் சின்னவெங்காயம் பயிர் செய்தபோது நல்ல விலைக்கு விற்பனை யானது. இதனால் இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய பயிர்களை அதிகளவில் பயிர் செய்துள்ளனர். இதில் கோ-ஆன் 5 மற்றும் ஒடிசா நாற்று ரகங்களை பயிர் செய்ய 1 ஏக்கருக்கு விதைகள், கூலி, களை எடுத்தால், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது.

இந்த நிலையில் சின்ன வெங்காய பயிர்கள் 100 நாட்கள் முடிவடைந்த நிலையில் அறுவடை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக சின்னவெங்காயம் 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது. இனிவரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளது.

சின்ன வெங்காயம் பயிர் செய்ய உரம் மற்றும் இடுபொருட்களின் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் 100 நாட்கள் கஷ்டப்பட்டு பயிர்செய்து ஆட்கள் பற்றாக்குறை சமாளித்து உற்பத்தி செய்யும் விவசாயிக ளுக்கு நல்ல விலை கிடைக்காமல் போனதால் கடந்த சீசனில் பெறும் நஷ்டம் அடைந்தோம்.

மேலும் நல்ல விலை கிடைக்கும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்யமுடிவதில்லை என்றாலும் குறைந்த அளவு விவசாயிகள் சின்ன வெங்காயத்தை தற்போது அறுவடை செய்து கொண்டனர். இவ்வாறு அவர்கள் கூறினர். விவசாயிகளுக்கு ஓரளவு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...