காங்கேயம் அருகே மாடு திருடனை சிசிடிவி வீடியோவை வைத்து பிடித்து சிறையில் அடைத்த காவல்துறையினர்

கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியை திருடிச்சென்ற கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வீரணம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லாங்காடு பகுதியில் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள ஒரு சிந்து மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டி ஆகியவற்றை கடந்த மாதம் ஏப்ரல் 26ஆம் தேதி காணவில்லை என மாட்டின் உரிமையாளர் அருண் பிரசாத் (27) காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

புகாரை தொடர்ந்து போலிசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாடுகளை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் தொடர்ச்சியாக மாடு கட்டிவைக்கப்பட்டிருந்த பகுதிகளிலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த காவல்துறையினர், அதில் பதிவான வாகனம் குறித்தும் விசாரணை செய்தனர்.



இந்நிலையில் இரண்டு மாடுகளையும் திருடி சென்ற திருடனை காங்கேயம் போலிசார் தேடி பிடித்துள்ளனர். இதனை அடுத்து போலிசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட திருடன் பெயர் சந்தோஷ்குமார் வயது 32 என்பதும், கரூர் மாவட்டம் வைகை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது‌. இதனை அடுத்து காங்கேயம் போலிசார் சந்தோஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...