கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் மலை ஏற்றத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஒன்றாம் மலையை ஏறிக்கொண்டிருந்த புண்ணிய கோடி என்பவருக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். 

பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மலையேற்றத்தின் போது சில பக்தர்களுக்கு உடல் உபாதை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது இங்கு வழக்கமான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் முதல் மூச்சு திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பல்வேறு மரணங்கள் ஏற்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

நேற்று, 28.4.2024 ஆம் தேதி பிற்பகல் சுமார் 12 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் அடிவாரத்தில் தரிசனம் முடித்து விட்டுசுமார் 12 மணிக்கு மலை ஏற துவங்கினர்.

அப்போது, ஒன்றாவது மலையில்,திடீரென புண்ணிய கோடி என்பவர் தனக்குவயிற்று வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்று கூறி வாந்தி எடுத்து உள்ளார். உடன் இருந்தவர்கள், உடனே அவரை கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அவரை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். இது குறித்து ஆலந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடல்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில், திருப்பூர் மற்றும் சேலத்தை சேர்ந்த பக்தர்கள் இருவர் மலை ஏற்றத்தின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளிங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகளை தடுப்பதற்கு, அரசு உடனடியாக மருத்துவ முகாம்கள் அமைத்து முதலுதவி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் மட்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...