கோவை வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் மட்டும் மலை ஏறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஏப்ரல்.28) திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 நபர்கள் வந்து அடிவாரத்தில் தரிசனம் முடித்து பூண்டி மலை ஏற தொடங்கினார். அப்போது ஒன்றாவது மலை ஏறும் போது புண்ணியகோடி என்பவர் வயிற்று வலிக்கிறது என்றும் கழிவறை செல்ல வேண்டும் என்றும் வாந்தி எடுத்து உள்ளார். 



பின்னர் உடன் இருந்தவர்கள் கீழே அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மாலை 5 மணிக்கு ஆலந்துறை பகுதியில் உள்ள பூலுவபட்டி அரசு மருத்துவமனையில் சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

இது குறித்து ஆலந்துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்து, உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வருடத்தில் மட்டும் மலை ஏறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Newsletter

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...