24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் - மத்திய இணையமைச்சர் எல். முருகன்

தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப கோளாறுகளைத் தவிர்ப்பதற்கான பணியை அதிகரிக்க வேண்டும் என்று நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமராக்கள் 20 நிமிடம் நின்றது குறித்து கோவையில் பேட்டி.


Coimbatore:சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்த மத்திய இணையமைச்சர் எல் முருகன் மேட்டுப்பாளையம் சென்றார். இதற்கு முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்தித்த எல்.முருகன், நேற்று நீலகிரி ஸ்டார்ங்ரூம்(strong room)கேமரா திரை 20 நிமிடம் நின்று விட்டது. தொழில்நுட்ப கோளாறு என்கிறார்கள். இவ்வாறு தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணியாக இருக்கிறது.

கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றார்.



எந்தவித ஐயமும் இல்லாதவாறு தேர்தல் ஆணையம் முறையாக பணி செய்ய வேண்டும் என்றவர், பல இடங்களில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு உள்ளது. இதில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள் பாஜகவுக்கு வாக்காளர்களின் விடுபட்டுள்ளது என குற்றம் சாட்டியவர், நீலகிரி, கோவை, தென் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நீக்கப்பற்றிருப்பது திமுகவின் தோல்வியை மறைப்பதற்காக எங்களுடைய வாக்காளர்களை நீக்கி இருக்கிறார்கள் என்றார்.

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த காங்கிரஸின் குற்றச்சாட்டிற்கு பதிலத்த எல்.முருகன், வாக்குப்பதிவு இயந்திரம் (Evm machine)ல் எதுவும் செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கி இருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது என்றும் காங்கிரஸ் இன்டி கூட்டணியினர் தோல்வி பயத்தில்இதனை சொல்கிறார்கள் என்றார்.

அயோத்தியில் உள்ள மக்கள் ஒவ்வொருவருடைய எண்ணம் ராமர் கோயில் வேண்டும், 500 ஆண்டுகள் போராட்டம் முடிவுக்கு வந்து அங்கே தற்போது ராமர் கோவில் கட்டப்பட்டிருக்கிறது என்றவர், இந்தியர்களின் ஒவ்வொருவரின் கனவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அனைவரும் சென்று வழிபடுகிறார்கள் என்றார். வழிபாடு செல்லவில்லை என ராகுல் கூறுவது எதை காட்டுகிறது என்றால் ராமரை வெறுக்கிறாரா? அல்லது இந்து மதத்தை வெறுக்கிறாரா? அல்லது கடவுள்களை வெறுக்கிறாரா? என்பதை தான் காட்டுகிறது என்றார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...