குமாரபாளையத்தில் கழிவறைகளை சுத்தம் செய்த மாணவிகள் - தலைமை ஆசிரியர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகிய இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் கீதா பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே பள்ளி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கருங்காலி வலசு கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் இருவர் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகியோர் பள்ளி கழிவறையை மாணவிகளை வைத்து சுத்தம் செய்ய வைத்ததாக புகார் இருந்தது.



இது தொடர்பாக சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜ் கவனத்திற்கு உடனடியாக தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரிக்குமாறு உத்தரவிட்டனர்.

விசாரணையில் மாணவிகள் இருவரையும் பள்ளி ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது தெரியவந்தது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா ஆகிய இருவரையும் மாவட்ட கல்வி அலுவலர் கீதா பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த மாத இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளமதி ஈஸ்வரி பணி நிறைவு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...