குளம், குட்டைகளுக்கு குளிக்க செல்ல வேண்டாம் - கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

பொதுமக்கள் ஆறு, குளம், குட்டைகளில், குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார்.


கோவை: கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் 3 பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் நேற்று குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கோவை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் இன்று ஏப்ரல்.24 வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ள நீர் நிலைகளில் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் குளிக்க செல்லும் பொழுது நீர்சூழல் (அ) சேறுகளின் புதைக்குழிகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.

எனவே, கோவை மாவட்டம் முழுவதும் 10 அடி ஆழத்திற்கு மேல் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் எச்சரிக்கை பலகை அமைத்திட பொதுப்பணித்துறை/நீர்வள ஆதாரத்துறை/கிராம பஞ்சாயத்துக்கள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் ஆறு, குளம், குட்டைகளில், குளிக்கவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுது போக்குக்காகவோ செல்வதை தவிர்க்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...