செல்வபுரத்தில் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை சாதகமாக சாட்சி சொல்ல மிரட்டிய 3 பேர் கைது

தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல வேண்டும் என்று பெண்ணின் தந்தையை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் 44 வயது நபர். இவரது மகள் கடந்த 2019ம் ஆண்டு சில வாலிபர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானார். இது குறித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவை வடவள்ளி தில்லை நகரை சேர்ந்த கார்த்திக் (எ) பப்ஸ் கார்த்திக்(29), ஆட்டோ மணி(33), பிஎன் புதூர் பொன் நகரை சேர்ந்த மணிகண்டன்(35), ராகுல், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் மற்றும் பிரகாஷ் ஆகிய 7 பேர் கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர்கள் அடிக்கடி பெண்ணின் தந்தையை வழக்கை வாபஸ் பெறும்படி மிரட்டியதாக தெரிகிறது. தொடர்ந்து நேற்று ஏப்ரல்.22 செல்வபுரம் பகுதியில் பெண்ணின் தந்தை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி உள்ளிட்டோர் பெண்ணின் தந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் கோர்ட்டில் தங்களுக்கு சாதகமாக சாட்சி சொன்னால் ரூ.15 லட்சம் தருகிறோம் என தெரிவித்தனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி பெண்ணின் தந்தையை தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பினர்.

பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தையை சாதகமாக சாட்சி சொல்ல மிரட்டிய பப்ஸ் கார்த்திக், ஆட்டோ மணி, மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களில் பப்ஸ் கார்த்திக் மீது போக்சோ, பெண்கள் வன் கொடுமை உள்ளிட்ட 7 வழக்குகள் கோவை காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...