உடுமலை அருகே பாசனத்திற்கு கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்

அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து நான்கு நாட்களில் தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி அணை மூலம் பெதம்பம்பட்டி அருகில் உள்ள ஜே கிருஷ்ணாபுரம் கிளை வாய்க்கால் மூலம் 6500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் ஆண்டு பாசனத்தில் இரண்டாம் சுற்றில் ஜே கிருஷ்ணாபுரம் கிளை கால்வாய் பகுதியில் பாசனத்திற்கு ஐந்து நாட்கள் தண்ணீரை வழங்க வேண்டிய நிலையில், தற்சமயம் நான்கு நாட்கள் மட்டும் வழங்கி விட்டு தண்ணீர் முன்னறிவிப்பின்றி வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. அரசாணையில் ஐந்து நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவு இருக்கும் நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தன்னிச்சையாக முடிவெடுத்து தண்ணீர் நிறுத்தம் செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதிலளிக்க காரணத்தால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் தண்ணீர் திறக்க வலியுறுத்தி உடுமலை செஞ்சேரிமலை சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொது பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தண்ணீர் முறையாக வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.



உடுமலை அருகே சாலை மறியல் போராட்டம் காரணமாக உடுமலை செஞ்சேரி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...