வனத்துறையினரின் நீண்டநேர போராட்டத்திற்குப் பின் குட்டையில் தவறிவிழுந்த யானை வனத்திற்குள் சென்றது


கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், குஞ்சூர்பதி வனக்குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ள கசிவுநீர்குட்டையில் இன்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று கால் வழுக்கி விழுந்ததில் எழ முடியாமல் இருந்தது.



இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரி பழனி ராஜன் தலைமையிலான வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் மனோகரனும் இணைந்து யானையை நிற்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.



இதனிடையே, அந்த பெண் யானையின் அருகில் ஒரு குட்டி யானையும், பெரிய யானை ஒன்றும் இருந்ததாலும், குட்டி யானை தொடர்ந்து கீழே விழுந்த யானையிடம் பால் குடிக்க வந்ததாலும் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவரால் அடிப்பட்ட யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டது.



இருப்பினும், நீண்ட நேர போராட்டத்திற்குப் பின் அந்த யானைக்கு ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் கிருமிநாசினி மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.



இதைத்தொடர்ந்து, ஜேசிபி இயந்திரத்தின் உதவியின் மூலம் அந்த யானை எழுந்து நிற்கவைக்கப்பட்டு வனப்பகுதிக்குள் அனுப்பிவைக்கப்பட்டது. 

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் காயங்களால் உயிரிழக்கும் தருவாயில் இருந்த பெண் யானை மீட்கப்பட்டு ஆரோக்கியமான நிலையில் குட்டி யானையுடன் வனத்திற்குள் சென்ற காட்சி வனத்துறையினர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...