நெகமம் பகுதியில் காவடி ஆட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக வேட்பாளருக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவாக நாட்டுப்புற கலைஞர்கள் நாதஸ்வரம், தவில், காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


கோவை: பாராளுமன்றத் தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.



பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியைக்கு ஆதரவாக தமிழ் கடவுள் முருகன் பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் நாட்டுப்புற கலைஞர்கள் நெகமம் பேருந்து நிறுத்தம் அருகில் நாதஸ்வரம், தவில், மேளதாளத்துடன் காவடியாட்டம், குதிரை ஆட்டம் ஆடி திமுக ஆட்சியில் இந்து அறநிலை துறை சார்பில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், ஆலயங்களில் அன்னதானத் திட்டம், ஆயிரம் ஆண்டுகள் பழமையான 112 கோவில்களில் திருப்பணிகள் நடைபெற நிதி ஒதுக்கீடு, உள்ளிட்ட திமுக ஆட்சியில் அறநிலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்களை பொதுமக்களிடம் வழங்கி நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...