வெள்ளகோவிலில் பிஜேபி நிர்வாகி வீட்டில் வருமான‌ வரித்துறை சோதனை - ரூ.31 லட்சம் பணம் பறிமுதல்

கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.28 லட்சம் பணத்தையும், சொந்த செலவிற்காக வைத்திருந்த ரூ.3.5 லட்சம் பணத்தையும் வருமானவரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக பிஜேபி நிர்வாகி ஜவஹர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உரிய ஆவணமின்றி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் தீத்தாம்பாளையம், பரப்புமேடு பகுதியை சேர்ந்த பிஜேபி கட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜவஹர் என்பவரது வீட்டில் உரிய ஆவணங்களின்றி ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைத்திருப்பதாக திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.‌

அதன் அடிப்படையில் வெள்ளகோவிலுள்ள அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீடு முழுக்க உள்ள அலமாரி, உள்பக்க அறைகள் மற்றும் வீட்டை சுற்றி தேடியதில் வீட்டின் உள்பக்க அறையில்சுமார் ரூ.31 லட்சத்து 74 ஆயிரத்து 200 ரொக்கப் பணம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட ரொக்கப் பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாருக்கு சொந்தமான பணம்‌ என்பதும், அசோக்குமார், ஜவஹர்குமாரின் நண்பர் என்பதால் வெள்ளகோவில் பகுதிகளில் கோவில் திருப்பணிகள் செய்வதற்கு இந்த பணத்தை கொடுத்து வைத்திருந்ததாகவும் ஜவஹர் தெரிவித்தார்.



மேலும் இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணமா என்ற சந்தேகத்துடன் போலிசார் அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணத்தை திருப்பூர் மாவட்ட வருமான வரித்துறைத்தினர் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை எண்ணப்பட்டு‌ வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜவஹர் தரப்பில் தெரிவித்ததாவது, எனது வீட்டில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் வீட்டிலிருந்து இரண்டு வருட காலமாக எங்கள் பகுதியில் கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த சுமார் 28 லட்சம் ரொக்க பணத்தையும், எனது சொந்த செலவிற்காக வைத்திருந்த சுமார் 3.5 லட்சம் ரொக்க பணத்தையும் முறையற்ற பணம் என கருதி எனது வீட்டிலிருந்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த தொகை கடந்த இரண்டு வருட காலமாக கோயில் கட்டுவதற்காக சேர்த்து வைத்திருந்த பணம் எனவும், மேலும் இந்த பணத்திற்கும் வருகின்ற தேர்தலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என எழுத்துப்பூர்வமான கடிதத்தை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Newsletter

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...