கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து நடிகர் கமல் ஹாசன் நாளை பிரச்சாரம்

பல்லடம் NGR சாலை பகுதியில் நாளை மாலை 6:30 மணிக்கு கமல் ஹாசன் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகிறார் என்று இன்று தகவல் வெளியாகியுள்ளது.


கோவை: 2024 பாராளுமன்ற தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்து இந்தியா கூட்டணிக்குள் நுழைந்தது. அதன்படி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வது என்றும், வரும் 2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநிலங்களவை (Rajya Sabha) தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இதை அடுத்து இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார். இந்நிலையில் நாளை (14.3.2024) கோவை மாவட்டம் பல்லடம் NGR சாலை பகுதியில் மாலை 6:30 மணிக்கு கமல் கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க வருகிறார் என்று இன்று ஏப்ரல்.13 தகவல் வெளியாகியுள்ளது.

Newsletter

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...