எடிட் செய்து வீடியோ வெளியீடு - புகார் அளிக்க இருப்பதாக திருப்பூரில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் விளக்கம்

பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன் என்று பறக்கும் படையினரை மிரட்டியது தொடர்பான புகாருக்கு முருகானந்தம் விளக்கம் அளித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் நல்லூர், மனியாரம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக வேட்பாளர் முருகானந்தம் பிரசாரம் மேற்கொண்டார்.



அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் பேசியதாக வெளியான வீடியோ பாதியை எடிட் செய்து பாதியை போட்டு இருக்கிறார்கள். பறக்கும்படை என்பவர்கள் தன்மையாக பேச வேண்டும். பறந்து யாரும் வரவில்லை. அவர்களும் மனிதர்கள் தான். நான் கடந்து செல்லும்போது ஒரு விவசாயிடம் ஒருமையில் பேசினார்கள். அதை பார்த்து மரியாதையாக பேசுமாறு கூறினேன்.

அந்த காட்சியை பார்த்து விட்டு சும்மா போக முடியாது. அதனால் மரியாதையாக பேசுங்கள் என்று கூறியதாகவும், அதில் பாதி வீடியோவை எடிட் செய்து போட்டிருக்கிறார்கள். பறக்கும்படை கேமரா மேன் வீடியோவை ஐந்து நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கு அளித்திருப்தன் மூலம் திட்டமிட்டு இதை செய்கிறார்கள் என்பது தெரிகிறது. இதுகுறித்து நானும் புகார் அளிக்க உள்ளேன். தொடர்ந்து என்னை குறிவைத்து துன்புறுத்துவதன் காரணம் என்ன?. இதை சட்டப்படி அணுக இருப்பதாக கூறினார்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...