சின்னக்கம்பாளையத்தில் கோழிப்பண்ணையால் சுகாதார சீர்கேடு - தேர்தலை புறக்கணிக்கபோவதாக பொதுமக்கள் அறிவிப்பு

கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவிற்குட்பட்ட சின்னக்கம்பாளையம் ஆறாவது வார்டில் செயல்படும் தனியார் தாய் கோழிப்பண்ணையால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



இந்த மனுவின் மீது கால்நடை பராமரிப்பு துறை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் கால்நடை பராமரிப்பு மண்டல இயக்குனர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் கோழிப்பண்ணை செயல்படும் இடத்தில் இருந்து 500 மீட்டருக்குள் குடியிருப்புகள் இல்லை என அறிக்கை தந்ததால் சுகாதார சீர்கேட்டின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து வருகிறது எனவும், எனவே தங்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் குடியிருப்புகளே இல்லை என அறிக்கை தந்த அதிகாரிகளை கண்டிக்கும் வகையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலை 57 குடும்பத்தினரும் புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...