கோவையில் கோடை வெயிலை முன்னிட்டு தடையில்லா குடிநீர் கிடைக்க ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டத்தில், கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் கோடை காலத்தில் தடையில்லா குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொள்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று (ஏப்ரல்.3) நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதா சுமன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.



இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில், கோடைகாலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படும் குடிநீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை, சென்றடைவதை மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்திடவும், குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் தொய்வின்றி கிடைக்கவும் பணியாற்றிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் ஆழ்துளை கிணறுகள் மூலம் முறைகேடாக தண்ணீர் விற்பனை செய்யபடுகின்றதா என்பதை கண்காணித்திட வேண்டும். கூடுதல் குடிநீர் தேவையுள்ள பகுதிகளைக் கண்டறிந்து, லாரிகள் மூலம் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். நீரின் தேவை மற்றும் சிக்கனத்தினை குறித்து பொது இடங்களில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...