நீலகிரி தொகுதியை பொறுத்தவரை மோடிஜியா, 2ஜியா என்ற போட்டி நிலவுகிறது - மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி

மேலும், பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை, பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர், சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளதாக கூறினார்.


திருப்பூர்: நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய இணை அமைச்சர் எல் முருகன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அவினாசியில் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கினார். முன்னதாக அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அருகிலுள்ள ரோட்டரி மஹாலில் அவினாசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், மத்திய அரசின் 10 ஆண்டுக்கால சாதனைகளையும் மாநில அரசின் மூன்று ஆண்டுக்கால ஊழல் அவலங்களையும் மக்களிடம் கொண்டு சென்று பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாகவும், நீலகிரி தொகுதி மக்கள் திமுக வேட்பாளரை கண்டு வெட்கி தலை குனிகிறார்கள். 2 ஜி வழக்கின் குற்றப் பின்னணி உடையவர், சனாதனம் பட்டியலின மக்களின் ஒரு தரப்பினரையும், பெண்கள் என பல தரப்பு மக்களையும் அவதூறாகப் பேசும் வேட்பாளரை பெற்றதால் அவர்கள் வெட்கி தலை குனிகிறார்கள் என்றார்.

மேலும், பாஜகவிற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதை பிரதமரின் ரோடு சோ மற்றும் திருப்பூர் சேலம் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மாநாடுகள் மூலம் அனைவரும் அறிந்துள்ளார்கள். நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் 2ஜி வழக்கை மீண்டும் சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது எனவும் பேட்டி அளித்தார். மேலும், நீலகிரி தொகுதியை பொருத்தவரை மோடி ஜி ஆயா 2 ஜியா என்ற போட்டி தான் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...